மதுபானசாலையை அகற்றகோரி மனு

இவ்வழக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் பொன்னுத்துரை கிருசாந்தன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த மே மாதம் 5ம் திகதி தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கில் வழக்காளிகளாக பொது அமைப்புகள் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையானார்.

புதன்கிழமை (18) விசாரணையின் போது மதுபானசாலை அமைப்பதற்கான தன் நிலையை குறித்த மதுபான சாலை உரிமையாளர் நீதிமன்றத்தில் விளக்கினார். உரிமையாளர் சார்பாக மற்றொரு சாட்சியம் அடுத்த தவணையின் போது அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் விசாரணையை நீதவான் ஒத்தி வைத்தார்.