மதுபோதையில் தனியார் பேருந்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமத்தை வாழ்நாள் முழுவதும் ரத்து செய்ய பாணந்துறை தலைமை நீதவான் சம்பிகா ராஜபக்ஷ உத்தரவிட்டார். அதற்கு மேலதிகமாக ரூ. 40,000 அபராதமும் விதிக்கப்பட்டது. வேதநாகம் எட்வின் நிமல் என்ற பேருந்து ஓட்டுநருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.