மதுரை மாவட்டம் திருவாதவூர்,அனையூர் முகாம் ஈழத் தமிழ் மக்கள் வெள்ள நிவாரண உதவி வழங்கினர்.

 

மதுரை மாவட்டத்தில் உள்ள திருவாதவூர்.”திருவாதவூர் என்றாலே நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருபவர் மாணிக்கவாசகர்”;.அவர் பிறந்த திருவாதவூரில் அமைந்துள்ள முகாமில் 539 குடும்பங்கள் வரை தங்கியிருக்கின்றனர்.இவர்கள் அன்றாடம் உழைத்து கஸ்டமான ஜீவனமே நடாத்தி வருகிறார்கள். இந்தச் சூழ்நிலையிலும் முகாமில் உள்ள மக்கள் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,57,000 வரையிலான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கினர். இந்தப்பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள்,முகாhம் மக்கள் கலந்து கொண்டனர்.

இதே போல் மதுரையில் உள்ள ஆனையூர் முகாம் மக்களும் நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.இந்த முகாமில் 485 குடும்பங்கள் வரை வசித்து வருகிறார்கள்.இவர்களும் கஸ்டமான ஜீவனமே நடாத்தி வருகிறார்கள்.இந்த நிலையிலும் இவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,02,160 வரையிலான நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.

ஆனையூர் முகாமில் மக்களிடம் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை முகாம் தலைவர் அன்ரனி,ஒருங்கிணைப்புக்குழு றீகன்,பாரதி மற்றும் கல்லூரி மாணவர்கள் சங்கீதன்,திலிப்,பிரகா}ஸ் இவர்களுடன் மணிகண்டன் எனபவரும் கலந்து கொண்டார்.
நிவாரணப் பொருட்கள் 9.12.15 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள வெள்ள நிவாரண சேமிப்பு நிலையத்தில,; தாசில்தார் புஸ்பா,உதவி தாசில்தார் கே.சுரேஸ் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

கஸ்டமான வாழ்க்கை நடத்திவரும் அகதி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கியதுகண்டு நிவாரணப் பொருட்கள் சேமிப்பு நிலைய ஊழியகள்; அதிகாரிகள் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.