மனோ கணேசனுக்கு எதிராக மலையகத்தில் போராட்டம்

தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானிக்கு எதிராக பெருந் தோட்ட கம்பனிகள் இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை விதிக்க கோரி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இதற்கமைய உயர் நீதி மன்றம் வழக்கை பரிசீலித்து இடைக்கால தடை விதித்துள்ளது.

இது குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் நீதிமன்ற வளாகத்தில் கடந்த (04) ஆம் திகதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

அவர் வழங்கிய கருத்தில் எதிர் கட்சிகள் இந்த சம்பள விடயத்தில்  நீதி மன்றம் வழங்கிய இடைக்கால  தடை தீர்ப்புக்கு பட்டாசு கொழுத்தி, பால் சோறு போங்கி கொண்டாட வேண்டாம் என அமைச்சர் ஜீவன் குறிப்பிட்டிருந்ததாகவும், இதற்கு எதிராகவும், அமைச்சர் ஜீவன் தொண்டமானையும், அரசாங்கத்தையும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் 1700 ரூபாய் சம்பள விடயத்தை விமர்சித்து   ஊடகங்களுக்கு  அறிக்கை விடுத்தமையை கண்டித்து இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் இ.தொ.கா களம் இறங்கியது.

இதனடிப்படையில் மூன்று மாவட்டங்களில் ஐந்து பிரதான நகரங்களில் இந்த எதிர்ப்பு போராட்டம் அந்தந்த பிரதேசத்திற்கு பொறுப்பான இ.தொ.கா முக்கியஸ்தர்களின் தலையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்தில்  கொட்டக்கலை நகரில் தபால் நிலயத்திற்கு முன் இடம்பெற்ற போராட்டத்தை முன்னால் பிரதேச சபை தலைவர் இராஜாஜ  பிரசாத் தலமை தாங்கி நடத்தினார்.

அதேபோல் பொகவந்தலாவை நகர் சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி காவத்தை நகர்,  கேகாலை தெஹியோவிட்ட நகர் மற்றும் ,ஊவா மாகாணத்தில் பதுளை நகரத்திலும்,  மனோகணேஷன் எம்.பிக்கு எதிரான இந்த எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றுவுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.