மன்றத்தில் தூங்குவது யார்

பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் தனிநபர் பிரேரணைகள், பிரதம மந்திரியுடனான கேள்விகள், மனுக்கள், வாய் மொழி மூல விவாதங்கள் (சட்டமூலம், உத்தரவு, தீர்மானங்கள் தொடர்பில்) ,எழுத்துமூல வினாக்கள், எழுத்து மூல வினாக்களுக்கான பதில் போன்ற செயற்பாடுகளில் எத்தனை தடைவைகள் ஈடுபடுகின்றனர் என்பதை மதிப்பிட்டு இப்புள்ளிவிபரங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றது…

இன்னிலையில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் இறுதி பத்து இடங்களுக்குள் தெரிவாகி உள்ளார்.
இதனை சாட்டாக வைத்து பிள்ளையானுடைய பாராளுமன்ற செயற்பாடுகள் செயலூக்கம் அற்றவை என்று நிரூபிக்க பலர் தலையால் மண் கிண்ட முனைகின்றனர்.

பல பத்து வருடங்களாக பாராளுமன்றத்தில் தூங்கி வழியும் சம்பந்தன் சித்தார்த்தன் போன்றோரது அசட்டுத்தனங்களை இதன் மூலம் சரிசெய்வது அவர்களது நோக்கம் ஆகும்.
அடுத்தது பிள்ளையானது செயலூக்கம், இயங்கு திறன் போன்றவற்றை குறைவாக சித்தரிக்க முனைகின்றனர்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இடம்பெற்ற முதலாவது பாராளுமன்ற அமர்வு ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நடைபெற்ற போது சிறையில் இருந்து பிள்ளையான் முதலாவது அமவுர்க்கு கலந்து கொண்டார்.

அதன் பின்னர் கொராணா காரணமாக சிறையில் அதிகமான தொற்று பரவல் காணப்பட்டது. அதன் காரணமாக சிறையிலிருந்து பிள்ளையானுக்கு பாராளுமன்றத்துக்கு செல்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

2021 ஜனவரி மாதம் 13ம் திகதியன்று பிள்ளையான் வழக்கிலிருந்து விடுதலையான பின்னர்தான் தொடர்ச்சியாக பாராளுமன்ற அமர்வுகளுக்கு கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக அதிக அமர்வுகளை அவர் தவற விட நேர்ந்தது. அவ்வேளைகளில் இடம்பெற்ற விவாதங்கள் உரையாடல்கள் பிரேரணைகள் அனைத்திலும் அவர் கலந்து கொள்ள முடியவில்லை.

இந்நிலையில். பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதை ஒட்டிய செயற்பாடுகளை மட்டும் வைத்துக்கொண்டு பிள்ளையானின் செயல் ஊக்கத்தை குறைத்து மதிப்பிட முனைவதன் பின்னணி அவர் மீதான காழ்புணர்ச்சி அன்றி வேறில்லை.

பிள்ளையானின் செயலூக்கமும் இயங்குதிறனும் ஊரறியும் உலகறியும்.

(நன்றி: உண்மைகள்)