மீன்பிடி துறைமுகத்தைப் பயன்படுத்தும் மீன்பிடிக் கலங்ளுக்கு எரிபொருள் வழங்குவதற்கான உடன்படிக்கை, இன்று (20) கைச்சாத்திடப்பட்டது. கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால், மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்துக்கும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்ததுக்கும் இடையிலேயே, இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.