மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

நாட்டில் அதிகளவில் மரக்கறி உற்பத்தி செய்யப்படுகின்ற மாவட்டங்களில் நுவரெலியாவும் ஒன்றாகும் இம்முறை  மரக்கறி வகைகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத வீழ்ச்சியால் கைவிடப்பட்ட நிலையில் இன்று  காட்சியளிக்கின்றன.

மரக்கறி விலை வீழ்ச்சி குறித்து மேலும் தெரியவருகையில்.

நுவரெலியாவில் அதிகமானோர் விவசாயத்தை மாத்திரம் நம்பி வாழ்க்கை நடத்துகின்றன இதனால்  இம்முறை கரட் லீக்ஸ் போன்ற மரக்கறிகளை பயிரிட்டுள்ளன. இதே ஐந்து மாதங்களுக்கு முன்பு வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் துரிதமாக அதிகரித்து ஒரு கிலோ கரட் 1,800 ரூபாய்க்கு கொள்வனவு செய்து  2,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது

தற்போது நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 70 ரூபாய் தொடக்கம் 80  ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது கரட் உற்பத்தி அதிகமாக இருப்பதாலும் சந்தையில் கரட்டின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இம்முறை கரட் பயிரிட்டவர்களின் பலரது தோட்டங்களில் அழுகிய நிலையிலும் முற்றிய காணப்படுகிறது எனினும் உரிய விலையின்றி சந்தைப் படுத்த முடியாது பெரும் நட்டத்தை தாம் அடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மரக்கறி வகைகள்  விலையில் மாற்றம் ஏற்பட்டு இருந்த போதிலும் கிருமி நாசினிகள், நாளாந்த கூலி, பசளை உள்ளிட்டவற்றில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. விவசாய பொருட்களின் விலை மற்றும் காலநிலை உள்ளிட்ட சவால்களுக்கு முகம் கொடுத்து விவசாயத்தில் ஈடுபட்டு வரும் எமக்கு, செய்கைக்கு ஏற்ற விலை கிடைக்கவில்லை என்றும், இதன் காரணமாக நாளாந்தம் ஏற்படுகின்ற செலவினை கூட தம்மால் பெற முடியாத நிலையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.

உரிய விலையின்றி விவசாய நிலங்களில் கண்முன்னே அழிவடைக்கின்ற மரக்கறி உற்பத்திகளை பார்க்க மிக வேதனையாக இருப்பதாகவும் பொருளாதார மையங்களில் உரிய விலை கிடைக்காத காரணத்தால் மரக்கறிகளை குப்பையில் போட வேண்டியதாக இருக்கிறது என அங்கலாய்த்துக் கொள்கின்றனர்.

Leave a Reply