அரசாங்கத்தின் மோசமான சுகாதார நிர்வாகத்தால் மீண்டும் ஒரு அலை ஏற்படலாம் எனவும், கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக தங்களது உயிர்களை பணயம் வைத்து செயற்படும் சுகாதாரத்துறையினருக்கு வழங்க வேண்டிய கொரோனா வைரஸ் நிவாரணங்களைகூட அரசாங்கம் இல்லாது செய்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறையினர் தங்களுக்கு கிடைக்கும் சம்பளத்தில் அதிகளவான தொகையை போக்குவரத்துக்காக செலவிடுகிறார்கள். சுகாதார ஊழியர்களுக்குக் குறைந்தது என்-95 முகக் கவசங்களை கூட அரசாங்கம் வழங்கவில்லை. இதுவரையில் சுகாதார ஊழியர்கள் 8 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்றார்.