“மனிதனுக்கு பதிலாக தொழிநுட்பம் வேலைசெய்ய ஆரம்பிக்கும் அது தொழிநுட்பத்தை பயன்படுத்த விரும்பாதவர்களை கைவிட்டுவிடும் ஆக தொழிநுட்பத்தோடு பயணிக்காவிட்டால் அது எம்மை கைவிட்டுவிடும், மலையகத்தில் டிஜிட்டல் கற்றலின் சாத்தியங்கள்” – கலாநிதி நவரட்ணராஜா
“வறுமை காரணமாக பல்கலை கல்வியை எத்தனையோ மலையகம் மாணவர்கள் இடைநிறுத்தியுள்னர்” – கலாநிதி எஸ் .கருணாகரன்
போன்ற மூத்த எழுத்தாளர்களின் படைப்பாற்றலை வெளிகொணர்ந்த, ”மலையகம் 200க்கு அப்பால் ” தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தமிழ் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் சனிக்கிழமை (14) பிற்பகல் இடம்பெற்றிருந்தது.
அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்த குழு குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்ததுடன் ஞாபாகர்த்த குழுவின் தலைவர் எம் வாமதேவன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் ,பிரதம அதிதிகளாக மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சசர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் பெருந்தோட்டம் சமூகம் உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்ததுடன் ,மலையகத்தின் மூத்த எழுத்தாளர்கள் ,பேராசிரியர்கள் ,இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.