இவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்டு ஏராளமான எதிர்கட்சிகளும், விளையாட்டு வீரர்களும் களமிரங்கினர். 3 மாதங்களுக்கு மேலாக போராட்டங்கள் தொடர்ந்தாலும், ஒன்றிய அரசு அந்த பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்பியுடன் புதிய நாடாளுமன்றத்தை திறந்தார் மோடி.
இதை அறிந்த மல்யுத்த வீராங்கனைகளும், வீரர்களும் நாடாளுமன்றத்தை நோக்கி போராட்டத்தை திருப்பினர் புதிய நாடாளுமன்றம் திறந்த நாளில்.
அவர்களை டெல்லிபோலீசு காட்டுமிராண்டித்தனமாக தாக்கி, பொய்வழக்கு ஜோடித்து, போராட்ட பந்தல்கள், மேடைகள் அனைத்தையும் சூறையாடினர். போராட்டம் தொடர அனுமதி மறுத்தனர்.
இந்த நிலையில், பாலியல் கொடூரன்மீது நடவடிக்கை எடுக்காமல், அவருக்கு அடைக்களம் கொடுக்கும் பிரதமரின் செயலைக் கண்டித்தும், எம்பிமீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரியும், தாங்கள் பெற்ற தேச, சர்வதேச வெற்றி பதக்கங்களை கங்கையில் ஹரிதுவாரில் வீசி விடுவோம் என்று அறிவித்து இன்று ஹரிதுவாரியில் கூடினர்.
அப்போது ஐக்கிய விவசாயிகள் முன்னணி தலைவர்கள் நரேஷ் திக்காயத் உள்ளிட்டு விவசாயிகள் சங்க தலைவர்களும் விவசாயிகளும் விரைந்து சென்று வீரர்களை சமாதானம் செய்து, பதக்கங்கள் பெற்றுக் கொண்டனர்.
இன்னும் 5 நாட்கள் பொறுங்கள் என வீரர்களிடம் கேட்டுக் கொண்டதோடு, 5 நாளில் ஒன்றிய அரசு இதற்கு தீர்வு காணவேண்டும் என கெடு விதித்துள்ளனர்.
முதல்கட்டமாக நாடுமுழுவதும் ஜூன் 05 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்களை உள்ளடக்கிய ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM சமுக்த்தா கிஷான் மோர்ச்சா) அறிவித்து உள்ளது. இதில் அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாட்டுக்குப் பெருமை சேர்த்த மல்யுத்த வீராங்கனைகளை வீரர்களை பாதுகாப்போம்! ஒன்றிய அரசை பணிய வைப்போம். ஓரணியில் திரள்வோம்!