காலநிலை மாற்றத்தை அடுத்து ஞாயிற்றுக்கிழமை (30.04.2023) காலை முதல் தொடர்ச்சியாக பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக நுவரெலியா கந்தப்பளை பிரதேசத்தில் பெய்த மழைக் காரணமாக பார்க் தோட்டத்திலிருந்து கந்தப்பளை கல்பாலம் வரை பெருக்கெடுத்து ஓடும் பாம்பன் ஆற்று நீர் விவசாய காணிகள்,மற்றும் வீடுகளுக்கு உட்புகுந்த நிலையில் மரக்கறி பயிர்கள் பாதிப்புக்கு உள்ளாக்கியது.அதேநேரத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த அடை மழையினால் இப்பிரதேச மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.