ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிக்காக ஈரோஸ் அமைப்பினரும் வன்னியில் கடும் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா மாவட்டத்தில், தமிழர் விடுதலைக் கூட்டணி சின்னத்தில் போட்டியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் ஒரு நேரடி வெற்றியாளர் உட்பட 11 ஆசனங்களை பெற்றிருந்தது. அதில் ஈ.பி.ஆர்.எல்.எப் தனக்கு கிடைத்த ஆசனங்களில் வவுனியா வடக்கில் தமிழ்செல்வன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் சசிதரன் ஆகியோரை ஈரோஸ் சார்பில் உறுப்பினர்களாக நியமித்தது.
இந்நிலையில், கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடக்கம் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியுடன் இணந்து செயற்பட்ட ஈரோஸ், தற்போது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இதேவேளை, வடமாகாண முன்னாள் முதலமைச்சரின் கூட்டணியில் இணைவது குறித்தும் ஈரோஸ் பிரதிநிகள் முன்னர் கலந்துரையாடி இருந்தது.
இந்நிலையில், ஈரோஸ் அமைப்பு பொதுஜன பெரமுனவுடன் இணைந்தமையால், தமிழர் விடுதலைக்கூட்டணியுனூடாக உள்ளூராட்சி மன்றங்களில் பிரதிநிதித்துவத்தை பெற்றவர்களின் பெயர்களை, கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ ஆனந்தசங்கரி நீக்கிகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.