“மாளிகையில் சூழ்ச்சி”

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை  (11) இடம்பெற்ற  சட்டரீதியான ஏற்பாடுகளுக்கு அமைய உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது பற்றிய சபை ஒத்திவைப்பு வேலை விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்  போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,  

அரசியலமைப்பின் பிரகாரம்  எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதம்  ஜனாதிபதித் தேர்தல்   இடம்பெறவுள்ள நிலையில்  ஜனாதிபதியின் பதவி காலம் ஐந்து வருடங்களா  அல்லது ஆறு வருடங்களா?  என்ற சந்தேகத்தை  ஜனாதிபதியின் சகாக்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்.

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை ஆறு வருடங்களாக நீடிப்பது அவசியம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளமை பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு எவ்வித பிரச்சினையும்,சிக்கலும் கிடையாது.ஜனாதிபதியின் பதவி காலம் ஐந்து ஆண்டுகள் என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

அரசியலமைப்பு தொடர்பில் பொருள்கோடல்  வழங்கும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அவரது சகாக்களான வஜிர,ரங்கே ஆகியோருக்கு கிடையாது.அரசியலமைப்பின் 125 ஆவது உறுப்புரையின் பிரகாரம்  உயர்நீதிமன்றத்துக்கே  பொருட்கோடல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம்   நிறைவேற்றப்பட்டதன்  பின்னர் ஜனாதிபதியின் பதவி காலம் ஐந்து ஆண்டுகளா ?  அல்லது ஆறு ஆண்டுகளா ? என மூன்று முறை உயர்நீதிமன்றில் பொருட்கோடல் செய்யப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன தனது பதவி காலம் குறித்து உயர்நீதிமன்றில்  வியாக்கியானம் கோரினார்.பதவி காலம் ஐந்து ஆண்டுகள் என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டதன் பின்னர் சிவில் பிரஜை ஒருவர் ஜனாதிபதியின் பதவி காலம் குறித்து உயர்நீதிமன்றில் வியாக்கியானம் கோரினார்.அப்போதும் ஜனாதிபதியின் பதவி காலம் ஐந்து ஆண்டுகள் என்று வியாக்கியானம் வழங்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவி காலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்திய நபர் இந்த மாதமும் நீதிமன்றத்தை நாடினார்.இம்முறையும் ஜனாதிபதியின் பதவி காலம் ஐந்து ஆண்டுகள் என்று உயர்நீதிமன்றம் மூன்றாவது தடவையாகவும் வியாக்கியானம் வழங்கியுள்ளது.
 
ஜனாதிபதியின் பதவி காலம் ஐந்து ஆண்டுகள் என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதை உயர்நீதிமன்றம் மூன்று முறை உறுதிப்படுத்தியுள்ளது.ஆகவே இனி யாருக்கு என்ன பிரச்சினை ?பதவி காலத்தில்  சிக்கல் என்று குறிப்பிட்டுக் கொண்டு தொடர்ந்து கதிரையை பிடித்துக் கொண்டிருப்பது பைத்தியக்கார தனமான வேலை

இதேவேளை ஜனாதிபதியின் பதவிக்  காலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வியாக்கியானத்துக்கு எதிராக  செயற்பட ஜனாதிபதி மாளிகை சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இதில் வஜிர அபேவர்தனவுக்கும் பங்குண்டு.

ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும்.ரணில் விக்கிரமசிங்க படுதோல்வியடைவார்.அமைதியான முறையில் வீடு செல்வார் இதுவே நடக்கும்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தந்திரமானவர் அவர் எவ்வழியிலாவது தேர்தலை பிற்போடுவார்  என்று அவருக்கு சார்பானவர்கள் குறிப்பிடுகிறார்கள்.அனைவரும் குறிப்பிடுவதை போன்று ரணில்  தந்திரமானவரல்ல,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை நிர்வகித்ததை விடவும் ஐக்கிய தேசியக் கட்சியை அதிகம் நிர்வகித்துள்ளார்.இறுதியில் கட்சி படுதோல்வியடைந்தது.தேசிய பட்டியல் ஊடாகவே பாராளுமன்றம் வந்தார்.ஆகவே  ரணில் தந்திரமானவரல்ல, இவரை விடவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச  அரசியல் தந்திரமானவர்.  

அரசியலமைப்பில் ஜனாதிபதியின் பதவி காலம் ஐந்து  வருடங்கள் என்றும், பிறிதொரு இடத்தில் ஆறு ஆண்டுகள்  என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆகவே இந்த குறைப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் அமைச்சரவை பத்திரம்  ஒன்றை ஜனாதிபதி சமர்ப்பித்துள்ளார்.அமைச்சரவையும்  அங்கீகாரம் வழங்கியள்ளது.ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியதன் பின்னர் அமைச்சரவைக்கு ஏன் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும்?

இந்த சட்ட வரைவை  அவசர சட்டமாக நிறைவேற்ற முடியாது.அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் அவசர சட்டம் இயற்றும் முறைமை நீக்கப்பட்டது.அதனை தொடர்ந்து அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில்  தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்தம் ஆகிய விடயங்களுக்கு மாத்திரமே அவசர சட்டம் இயற்றப்பட வேண்டும்.அரசியலமைப்பு தொட்பான விடயங்களை  அவசர சட்டமாக இயற்ற முடியாது எனத்  தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதி  தேர்தல் நடத்தப்படும்.ஆகவே ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு ஜனாதிபதி முன்னெடுத்த சகல முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன.மக்களை குழப்பி விட்டு அதனுடாக மகிழ்ச்சியடையும் மனநிலை ஜனாதிபதிக்கு உண்டு.எனவே, தேர்தல் உரிய தினத்தில் நடத்தப்படும் என்பதில் மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்.என்றார்.