விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் நிகழ்வினையொட்டிய துண்டுப்பிரசுரத்தை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் பாரிஸ் கார் டு( Gare du Nord )நோர்ட் புகையிரத நிலையத்தின் குட்டி யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படும் தமிழர் வர்த்தக நிலையங்கள் கொண்ட லாச்சப்பல் வெளிச்செல்லும் நுழைவாயிலில் நேற்று பிற்பகல் 4.00 மணியளவில் விநியோகித்துக் கொண்டிருந்த அங்கு வந்த மற்றொரு சாரார் பிரான்ஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனையினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள மாவீரர் நாள் நிகழ்வினையொட்டிய துண்டுப் பிரசுரத்தை அதே நுழைவாயிலில் விநியோகிக்க முற்பட்டனர். இந்த வேளையில்; இரு சாராருக்கும் இடையேயான வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி இறுதியில் வாள்வவெட்டு சம்பவமாக முடிவடைந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் சம்பவ இடத்திற்கு விரைந்த பிரான்ஸ் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் முதற் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.