இந்த நிலையில், மியான்மரில் ஓராண்டுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.
மியான்மர் பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்ததால் அவசர நிலை அமுல்படுத்தப்பட்டு உள்ளதாக இராணுவ தரப்பில் தெரிவித்துள்ளது.
மியான்மரில் இன்று பாராளுமன்றம் கூட இருந்த நிலையில், இராணுவத்தின் இந்த நடவடிக்கையால் அந்நாட்டில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மியான்மாரில் நடைபெற்ற 2ஆவது பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி கட்சி அமோக வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.