உலகின் 4-ஆவது மிகப் பெரிய ஜனநாயக நாடான பிரேஸிலில் கடந்த 2 ஆம் திகதி ஜனாதிபதித் தோ்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 11 பேர் போட்டியிட்ட போதும், வலதுசாரி தலைவரான ஜனாதிபதி ஜெயீர் பொல்சொனாரோவுக்கும், இடதுசாரி தொழிலாளா் கட்சித் தலைவரான முன்னாள் ஜனாதிபதி லூலா டி சில்வாவுக்கும் கடுமையான போட்டி நிலவி வந்தது.