இதில், லூலா டி சில்வா 47.9 சதவீத வாக்குகளும், பொல்சொனாரோ 43.6 சதவீத வாக்குகளும் பெற்றனா். பிரேஸில் அரசமைப்புச் சட்டப்படி ஜனாதிபதித் தோ்தலில் வெற்றி பெறுவதற்கு 50 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும் என்பதால் முதல் இரு இடங்களைப் பெற்ற இருவருக்கும் கடந்த 30 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது.
அந்தவகையில் நேற்று முன்தினம் வெளியான தேர்தல் முடிவுகளின் படி, லூலா 50.8 சதவிகித வாக்குகளும், பொல்சொனாரோ 49.2 சதவிகித வாக்குகளும் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், மீண்டும் லூலா டி சில்வா பிரேசிலின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் லூலா டி சில்வாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.