இலங்கை – ஜப்பான் உறவை கட்டியெழுப்ப இருநாடுகளுக்கான அமைச்சர்கள் மட்ட உயர்குழு
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் சமூக, பொருளாதாரம், அரசியல் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முழுமையான தொடர்பாடலை வலுப்படுத்துவதற்கான திட்டத்தைத் தயாரிப்பதற்காக இரு நாடுகளையும் சேர்ந்த உயர்மட்ட அமைச்சர்களையும், அதிகாரிகளையும் உள்ளடக்கிய செயற்பாட்டுக் குழுவொன்றை அமைப்பதற்கு இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவும் தீர்மானித்துள்ளனர்.
ஜப்பான் நாட்டின் கியோத்தோ நகரில் உள்ள சர்வதேச மாநாட்டு கேந்திரநிலையத்தில் நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போதே இரு பிரதமர்களும் இந்தத் தீர்மானத்துக்கு வந்துள்ளனர்.
நாடு என்ற வகையில் இலங்கை எதிர்காலத்தில் முகங்கொடுக்கவுள்ள அனைத்து சவால்களின்போதும் ஜப்பான் நெருங்கிய நண்பன் என்ற வகையில் செயற்பட்டு இரு நாட்டு நட்புறவை மென்மேலும் வலுப்படுத்துவதற்காக ஜப்பான் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று ஜப்பான் பிரதமர் சின்சோ அபே கூறினார்.
இப்பேச்சுவார்த்தையின் போது ஆரம்பித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்வாழ்த்துக்களை ஜப்பான் பிரதமருக்குத் தெரிவித்தார்.
ஜே.ஆர்.ஜயவர்த்தனவினால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை ஜப்பான் சிநேகபூர்வ நட்புறவை மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் வலுப்படுத்தி முன்னெடுக்கும் என்பதில் தமக்கு எதுவித சந்தேகமும் இல்லை என்று ஜப்பான் பிரதமர் கூறினார்.
தற்போதைய அரசாங்கத் தின் கீழ் இலங்கை ஆசியாவில் பொருளாதாரம், சந்தை மற்றும் தொழில்நுட்ப துறையில்ஆசியாவின் வளர்ச்சி மையமாக முன்னேற்றத்துடன் வளர்ச்சியடைந்து வருகிறது என்ற உறுதியான நம்பிக்கையையும் ஜப்பான் பிரதமர் வெளியிட்டார்.
ஜப்பான் பிரதமர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், 1952ஆம் ஆண்டில் சான் பிரான்சிக்கோ மாநாட்டில் ஜே.ஆர்.ஜயவர்த்தன ஜப்பான் தொடர்பாக ஆற்றிய உரையுடன் இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்பாடல் உறுதிய டைய ஆரம்பமானது என்றார்.
இப்பேச்சுவார்த்தையின்போது கடந்த பொதுத் தேர்தலின்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெற்ற வெற்றிக்கு ஜப்பான் பிரதமர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இச் சமயம் ஜப்பான் பிரதமர் தொடர்ந்து குறிப்பிடுகையில், இலங் கைக்கு விஜயம் செய்த முதலாவது பிர தமர் எனது பாட்டனாரே ஆவார். அந்தப் பெருமையைத் தொடர்ந்தும் முன்னெடுத்து இலங்கையுடன் மிக நெருங்கிய நற்பை மேற்கொள்வதற்கு நான் எதிர்பார்க்கின்றேன்.
தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இலங்கை ஆசியாவி லேயே வளர்ச்சியடைந்துவரும் மைய மாக விளங்கும் என எதிர்பார்ப் பாகும். அங்கு தொழில்நுட்பம், பொருளாதாரம், பாதுகாப்பு துறைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத் தப்பட்டுள்ளது.
1952ஆம் ஆண்டில் ஜப்பான் தொடர் பாக ஜே.ஆர்.ஜயவர்த்தன வெளிப் படுத்திய அபிப்பிராயத்தை எனது மக்கள் ஒருபோதும் மறக்க மாட் டார்கள். அதனால் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சமாதானத்தைப் பாதுகாப்பதற்காக ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவு நல்கும்.
கல்வித்துறையில் புதிய பாதையை அடையாளம் கண்டு இலங்கை தொடர்ந்தும் முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்காக ஜப்பான் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இப்பேச்சுவார்த்தையின்போது இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டதாவது, ஜப்பானுக்கு விஜயம் செய்யுமாறு விடுத்த அழைப்பையிட்டு அரசாங்கத்தின் சார்பில் நான் நன்றிகளைத் தெரிவிக்கிறேன். இலங்கை 1952ஆம் ஆண்டு முதல் ஜப்பான் நாட்டின் பங்களிப்புக்களைப் புரிந்துகொண்டு செயற்பட்டு வருகிறது.
எனது கட்சியின் முன்னாள் தலைவரான ஜே.ஆர். ஜயவர்த்தன, சான் பிரான்சிக்கோவில் ஆற்றிய உரை இதனை உறுதிப்படுத்து கின்றது.
அதேநேரம் இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவின் காலம் முதல் ஜப்பான் நாட்டின் உலகுக்கான பங்களிப்புக் குறித்த தெளிவுடன் எமது நாடு செயற்பட்டு வருகிறது.
தற்போது இலங்கையில் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் இணைந்து உருவாக்கிய தேசிய அரசாங்கமே உள்ளது என்பதை இங்கு குறிப்பாக கூறவிரும்புகிறேன்.
தற்போதைய தேசிய அரசாங்கத்துக்கு சர்வதேசத்தில் மாத்திரமல்லால் தேசிய சவால்களுக்கும் மத்தியில் வலுவாக செயற்படக் கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
இலங்கை அரசாங்கம் முகங்கொடுக்கும் சவால்களுக்கு ஜப்பான் அளிக்கும் மிக நெருக்கமான ஒத்துழைப்புக்களை நான் எப்போதும் உச்ச அளவில் பாராட்டுகிறேன்.
தற்போதைய பிரதமரின் பாட்டனாரின் காலம் முதல் பல பரம்பரையினர் ஜப்பான் அரசியலில் உயர் பதவிகளை வகித்துள்ளனர். பிராந்திய அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுத்து ஜப்பான் செயற்பட்டு வருகிறது.
எதிர்வரும் தசாப்தத்தில் பூகோள சமத்துவம், சமூக பொருளாதாரம், அரசியல், தொடர்புகளுக்காக ஜப்பா னின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் மிக்கதாக அமையும் என்பதே எனது அபிப்பிராயமாகும். இந்து சமுத்திரத்தின் வங்காள விரிகுடாவில் கேந்திர முக்கியத்துவம் மிக்க நிலையமாக இலங்கை அமைந்துள்ளது.
ஆரம்ப காலம் முதல் எனது நாடு திறந்த நாடு என்ற வகையில் செயற்பட்டுள்ளது. அண்மைக் காலத்தில் இலங்கையின் கல்வி மற்றும் தொழில்நுட்ப அறிவுக்காக ஜப்பான் அளித்துள்ள பங்களிப்புக் களைப் பாராட்டுகிறேன். அது இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வளர்ச்சியடையச் செய்ய பின்புலமாக அமைந்துள்ளது.
அரசு-அரசு, அரசு -தனியார்துறை, தனியார்துறை-தனியார்துறை என்ற துறைகளின் ஊடாக இரு நாடுகளுக் கிடையிலான உறவும் வளர்ச்சியடைய வேண்டும். ஒவ்வொரு துறையி லும் முழுமையான உறவு இரு நாடுகளுக்கிடையிலும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.
உலகில் அனைத்து நாடுகளுடனும் ஒற்றுமையாகவும், சிநேகபூர்வமாகவும் செயற்படுவதே இலங்கை அரசாங்கத்தின் கொள்கையாகும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இப்பேச்சுவார்த்தையின் போது இலங்கைப் பிரதமருடன், தொழில் நுட்பம், தொழில்நுட்ப கல்வி தொழில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் தம்மிக்க கங்காநாத் திசாநாயக்க பிரதமரின் மேலதிக செயலாளர் சமன் அதாவுட ஹெட்டி, பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் மொன்டி காஷிம் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
யூ என் பி ஆட்சிக்காலத்தில் மட்டும் இலங்கையுடன் நட்பைப் பேணும் வழக்கத்தைக் கொண்டுள்ள ஜப்பான் மீண்டும் ரணில் பிரமர் ஆனதும் மீண்டும் இது வரை சுருட்டி வைத்திருந்த வாலை நிமிர்த்திக் கொண்டு புறப்பட்டு விட்டது. ஜே ஆர் காலத்தில் ரூபவாகினிக்கு ஒளிபரப்பை ஆரம்பிப்பதற்கான தொழில் நுட்பத்தை ‘இலவசமாக’ வழங்கி இலங்கை மக்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டிக்கான முழு விற்பனைக்கான உரிமத்தையும் பெற்று சதாரண பொது மக்களிடம் தொலைக்காடசிப் பெட்டிகளை விற்று கொழுப்பதிலிருந்து ஆரம்பித்த ஜப்பான வியாபாரம் மீண்டும் ரணிலின் வருகையுடன் கடைவிரிக்கத் தொடங்கியுள்ளது. இலங்கை மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய கால கட்டம்