இலங்கையின் சில வர்த்தக வங்கிகளில் ஐக்கிய அமெரிக்க டொலரின் பெறுமதி மீண்டும் இன்று(14) ரூ. 300 ஐத் தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று புதன்கிழமை (14) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் இலங்கை ரூபாவுக்கு எதிரான அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை ரூபா 318.9974 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 303.1925 ஆகவும் பதிவாகியுள்ளது.
