மேலும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகள் அதிகமாகக் காணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சீனாவின் பெரும்பாலான நகரங்களில் இக்காய்ச்சல் பரவுவதைத் தடுக்க , ஊரடங்கை அமுல்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் இதில் ‘சியான் மற்றும் ஷாங்சி நகரங்களில் காய்ச்சல் பரவுவதின் தீவிரம் அதிகரித்தால் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்றும், அறிகுறிகள் தென்பட்டால் உடனே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜின்ஹுவா, ஹாங்சோ மற்றும் பெய்சென் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டு ஒன்லைன் மூலம் கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.