(Vijay Baskaran)
நமது சமூகத்தில் நமது நாடுகளில் கற்ற கல்வி சமூகத்துக்கு பயன்படுவது இல்லை.பயன்படுத்துவதும் குறைவு.ஆனால் இந்தப் படித்தவர்கள் படிக்காத பாமர மக்களிடம் நிறையவே கற்கவேண்டியுள்ளது. கேரளாவில் வெள்ளத்தில் தத்தளித்த மக்களை எந்த பிரதிபலன் பாராது களத்திலே இறங்கி பல உயிர்களை மீனவர்களே காப்பாற்றியுள்ளனர்.இதைவிட தமிழக மீனவர்களும் பலன் எதிர்பராது உதவிக்கு சென்றுள்ளார்கள்.இந்த மீனவர்களே கேரளத்து இராணுவம் என பிரணாயி விஜயன் கூறி அவர்களை கௌரவுத்துள்ளார்.
தம்முடைய துணிவையும் நீச்சல் திறனையும் பல உயிர்களை காக்க அந்த மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.ஆனால் கேரளா மற்றும் அண்டைய மாநிலங்களில் இந்திய இராணுவம் கடற்படை என பல இருந்தும் இந்த மக்களுக்கு உதவ முன்வரவில்லை.அவர்களுடைய வசதி,திறமை எதுவுமே நாட்டு மக்களைக் காக்க உதவ்வில்லை.
சென்னையில்கூட இந்த ஏழை மீனவர்களாலேயே மக்கள் காப்பாற்றப்பட்டனர்.மத்திய மாநில அரசுகள் பாராமுகமாக இருந்தபோதும் மீனவர்களாலேயே சென்னையிலும் மக்கள் பிழைத்தார்கள்.
ஆனால் இதே மீனவர்களுக்கு சூறாவெளி, புயல் என துயரம் வரும்போது ஏனைய சமூகத்தவர்கள் கண்டுகொள்வதில்லை. குரல் கொடுப்பதில்லை. எத்தனை மீனவர்கள் கடலில் காணாமல் போனார்கள். இவர்களுக்கு மத்திய அரசோ, மாநில அரசுகளோ உதவ முன்வருவதில்லை.
சினிமா கதாநாயகர்கள் எல்லோருமே இப்படியான சூழ்நிலைகளில் தலைமறைவாகி ஓடிவிடுவார்கள். இதுவரை எந்த சினிமாக் கதாநாயகனும் இ்டர்களின்போது களத்தில் இறங்கியதில்லை. பணத்தை மட்டுமே வீசி ஒரு விளம்பரம். இவர்கள் எல்லாம் ஒரு கதாநாயகர்கள்.அவர்களுக்கு பாலாபிசேகம்.போஸ்டர்கள். கேவலம்.
கேரளத்துக் கதாநாயகன் பிரிதிவிராஜ் அவர்களின் அம்மாவையே சாதாரண ஏழைகள் அண்டாவில் வைத்து காப்பாற்றியுள்ளனர். கேரளாவின் சாலைகளையே கேவலப்படுத்திய அம்மாவுக்கு காப்பாற்ற நல்ல படகே கிடைக்கவில்லை.அந்த கதாநாயகனால் தன் அம்மாவைக் காப்பாற்ற முடியவில்லை.
ஒரு கதாநாயகன் ஒரு நாள் நடிப்புக்கு லட்சக்கணக்கில் பேரம் பேசுவான்.இவர்களோ எந்த கூலியையும் எதிர்பார்க்காமல் களத்தில் இறங்கிவிட்டார்கள்.இவர்களை நாளை இந்தசமூகம் மறந்துவிடும்.
இந்தப் படித்தவர்களும் பணமுதலைகளும் எவ்வளவு அனுபவப்பட்டாலும் திருந்தப்போவது இல்லை.அதற்காக ஏழைப் பாமர மக்கள் மனிதாபிமானத்தை தொலைக்கமாட்டார்கள்.
இந்த மீனவர்கள் வாழ்க்கை துன்பம் நிறைந்தவை.தன்னம்பிக்கை ஒன்றைத்தவிர எந்த உதவியும் இல்லை.குடும்பங்களுக்காக மட்டும் அல்ல நெருக்கடி நிலையில் ஆபத்தைக் கருத்தில் கொள்ளாது எந்த இலாப நோக்கமும் இன்றி மக்களைக் காப்பாற்றியுள்ளார்கள்.
ஒரு நாட்டை ஆளும் அரசுக்கு இல்லாத அக்கறை,நாட்டைக் காக்கவேண்டிய இந்திய இராணுவத்துக்கோ படைகளுக்கோ இல்லாத அக்கறை இவர்களிடம் இருந்திருக்கிறது.அதனால்தான் களம் இறங்கினார்கள்.
போலியான சினிமா கதாநாயகர்களை புறம்தள்ளி நிச கதாநாயகர்களான மீனவர்களைப் போற்றுவோம்.