முல்லைத்தீவு – கரைதுறைப்பற்றுப் பிரதேச சபையின் மாதந்த அமர்வு, நேற்று முன்தினம் (30) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், முல்லைத்தீவில் இருந்து கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கடலுணவுகள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் இதனால் கரைதுறைப்பற்றுப்பற்று பிரதேச சபைக்கு எந்த வருமானமும் கிடைப்பதில்லை எனவும் கூறினார்.
எனவே, இவ்வாறு முல்லைத்தீவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கடலுணவுகளுக்கு, கரைதுறைப்பற்று பிரதேசசபை வரி அறவீடுகளைச் செய்யவேண்டுமெனவும், அவர் தெரிவித்தார்.
அதற்காக முல்லைத்தீவு நகர சந்தையில், மீன் உட்பட கடலுணவுகளை வியாபாரம் செய்யக்கூடிய வகையிலான ஏற்பாடுகளை கரைதுறைப்பற்று பிரதேசசபை விரைவில் முன்னெடுக்க வேண்டுமென்றார்.