இடம்பெயர்ந்து 26 வருடங்களாகியும் தாங்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாதை கண்டித்தும், மீள்குடியேற்றத்தை விரைந்து மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் மயிலிட்டி வாழ் மக்கள், இன்று செவ்வாய்க்கிழமை (22) மயிலிட்டித்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தற்போது உயர்பாதுகாப்பு வலயமாகவிருக்கும் தமது பகுதி விடுவிக்கப்பட்டு, தாங்கள் மீள்குடியமர்த்தப்படுவதன் மூலம் தங்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்திக் கொள்ளலாம் எனவும், இடம்பெயர்ந்நது தாங்கள் பல துன்பங்களைச் சந்தித்து வருவதாகவும் அந்த மக்கள் கூறினர். இந்தப் போராட்டத்துக்கு அரசியல் பிரமுகர்கள், அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு மயிலிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.