இவ்வருடம் டிசம்பர் மாதம் வரையிலிலேயே இந்நாட்டிற்கு முட்டை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இருக்குமென ஊடகங்களுக்கு அவர் தெரிவித்தார்.
ஜனவரி மாதத்திற்குள், இந்நாட்டு நுகர்வுக்குத் தேவையான முட்டைகளை நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும்.
இலங்கைக்கு முட்டை மற்றும் அரிசி இறக்குமதி செய்யப்பட்டாலும், குறைந்த அளவு அரிசி மற்றும் முட்டை மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. சந்தையில் வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் நோக்கிலேயே இவ்வாறு செய்யப்படுகிறது என அவர் தெரிவித்தார்.
பொதுவாக எமது நாட்டிலிருந்து முட்டை, கோழி இறைச்சி மற்றும் சொசேஜஸ்களை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது வழக்கம். சர்வதேச சந்தையில் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கும் நோக்கிலேயே இவ்வாறு செய்யப்படுகிறது.