கொழும்பு துறைமுக நகரத்தின் கதவுகள் முதலீட்டாளர்களுக்காக இன்று முதல் திறக்கப்படவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (07) இரவு நடைபெறவிருக்கும் விஷேட நிகழ்வொன்றில் இதற்கான பகிரங்க அழைப்பு விடுக்கப்படுமெனவும் அறிய முடிகிறது. குறித்த நிகழ்ச்சியின் நிறைவில் வான வேடிக்கை நிகழ்வொன்றும் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.