முன்னுதாரணமாக செயற்படும் பதுளை மாநகர சபை

பதுளை மாநகர சபையின் மேயர் பிரியந்த அமரசறி, நகர ஆணையாளர் மற்றும் பொறியியலாளர்கள் உள்ளிட்டவர்கள் தற்போது தமது கடமைகளுக்கு சைக்கிளிலேயே வருவதுடன், ஏனைய அரச அதிகாரிகளுக்கு முன்னுதாரணமான செயற்பாட்டை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பதுளை மாநகர சபையின் மேயர், 21 வருடங்களுக்கு முன்பாக தன்னால் கொள்வனவு செய்யப்பட்ட சைக்கிளை தற்போது பயன்படுத்த தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் காலையில் சைக்கிளில் தொழிலுக்குச் செல்லும் போது மகிழ்ச்சியாக உள்ளதுடன் அது உடலுக்கு ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.