தங்கள் காணிகளை ராணுவமும் வனவள துறையினரும் அபகரித்ததை கண்டித்தும் அதை விடுவிக்கவும் கோரி மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க முற்பட்ட வேளையில் அந்த மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை துண்டித்தனர் இராணுவத்தினர் .
பின்னர் மின்சாரத்தை துண்டித்தனர் . எனினும் மக்கள் நடு ரோட்டில் விறகுகள் கொண்டு தீ மூட்டி அந்த வெளிச்சத்தில் இருந்து போராடினார்கள். இதை கண்ட இராணுவம் கைதட்டி சிரிச்சுதாம். ஆனால் காலையில் அயல் கிராம மக்கள் அங்கே குவிய தொடங்கி உள்ளார்கள். இந்த மக்களின் கோரிக்கை வெற்றியடைய அங்கே பக்கத்தில் இருக்கும் மக்கள் எல்லோரும் அங்கே அவர்களுக்காக அவர்களுடன் இணையுங்கள். எங்களுக்கான குரலை நாங்களே எழுப்புவோம்!
அண்மைக் காலங்களில் நல்லாட்சி அரசாங்கம் கண்டும் காணாமல் அனுமதித்துவரும் இந்த இராணுவ அத்து மீறல்களை மக்கள் அணிதிரண்டு தமது எதிர்பை காட்டிவருகின்றனர். வவுனியாவில் நடைபெற்ற காணாமல் போனோரை தேடிய நடாத்தப்பட்ட போராட்டங்களும் அமைச்சர்களின் வாக்குறுதி வரைக்கும் வந்த பின்பு கைவிடப்பட் நிலை எற்பட்டுள்ளது. இதற்கு அரசுக்கு ஒரு கால அவகாசம் வழங்கி இதனை தமிழ் மக்களைப் பிரநிதித்துப்படுத்தும் எமது அரசியலவாதிகள் பாராளுமன்றத்திலும் வெளியிலும் தமது செயற்பாட்டை விரிவுபடுத்த வேண்டும். மாறாக அடுத்த தேர்தலுக்கான உசுப்பேத்தும் செயற்பாடுகளுடன் மட்டும் சொகுசு வாகனங்களில் பயணிப்பதை மக்களும் கேள்விக்குறியாக்க வேண்டும்