
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் ஆகிய மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, வடமாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.