இதேவேளை, போராளிப் படைகளை மெகெல்லேயிலிருந்து கடந்தாண்டு நவம்பரில் அவர்கள் அரசாங்கப் படைகளால் துரத்தப்பட்ட பின்னர் முதற் தடவையாக கண்டுள்ளதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கப் படைகளுக்கும், திக்ரேயின் முன்னாள் ஆளுங் கட்சியான திக்ரே மக்களின் விடுதலை முன்னணிக்குமிடையே மெகெல்லேக்கு வெளியே மோதல் அதிகரிப்பதான அறிக்கைகளைத் தொடர்ந்தே இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.