மேற்கு ஆப்பிரிக்காவில் சீனாவின் சுற்றுச்சூழல் பேரழிவு

செனகல், கானா, சியரா லியோன், கினியா, நைஜீரியா, காம்பியா மற்றும் டோகோ போன்ற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் மீது சீனா கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. 

இந்த நாடுகளில் பெரும்பாலான நாடுகளில் பயன்படுத்தப்படாத இயற்கை வளங்கள் உள்ள நிலையில், அவற்றை தனது சொந்த இயற்கை வளத் தேவைகளுக்காக சுரண்டுவதற்கான இருப்புப் பொருளாக சீனா கண்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில், சீனாவுக்குச் சொந்தமான ஒரு மீன் உணவு நிறுவனம் காம்பியாவில் ஒரு தொழிற்சாலையைத் திறந்து, அதன் அனைத்து கழிவுப் பொருட்களையும் கடலில் வீசியது.  

மாசு பரவத் தொடங்கிய உடனேயே, தண்ணீரின் நிறம் மாறத் தொடங்கியதாகவும், பாதுகாக்கப்பட்ட கடல்சார் விலங்குகள் உயிரிழக்கத் தொடங்கியதாகவும் உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டியதுடன், சீன நிறுவனங்களுக்கு எதிராக அங்கு போராட்டங்கள் இடம்பெறுகின்றன.

மீன்பிடி அபிவிருத்தித் திட்டங்களுக்காக சியரா லியோனில் சீனாவின் முதலீடு, அப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு சேதம் விளைவிப்பதாக சுற்றுச்சூழல் குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

கடல்சார் பகுதிகளில் மட்டுமின்றி,  நிலத்தால் சூழப்பட்ட மாலியில், சீனா இன்னும் அதிகமான சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. 2017 மற்றும் 2022 க்கு இடையில், சீனா சுமார் 200 மில்லியன் டொலர் மதிப்புள்ள அரை மில்லியன் கோஸ்ஸோ மரங்களை இறக்குமதி செய்தது.

செஞ்சந்தனத்தை பிரித்தெடுப்பதற்காக கோஸ்ஸோ மரங்களை பெறுவது, சம்பந்தப்பட்ட பகுதிகள் மற்றும் காடுகளுக்கு மிகவும் அழிவுகரமான ஆதாரமாக கருதப்படுகிறது. 

2020 ஆம் ஆண்டில், செஞ்சந்தன அறுவடைக்கு மாலி தடையை விதித்திருந்த போதும், உயர் அதிகாரிகளுக்கு அதிக லஞ்சம் வழங்குவதன் மூலம் தடைசெய்யப்பட்ட மரக்கட்டைகளை சீனா தொடர்ந்து பெற்று வருவதாக உள்ளூர் புலனாய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமான இன்டர்நேஷனல் ரிவர்ஸ், சீன அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் ஆப்பிரிக்காவுக்குள் தங்கள் திட்டங்களில் சுற்றுச்சூழல் மற்றும் சமூக தரத்தை பூர்த்தி செய்யத் தவறிவிட்டதாக 2019 ஆம் ஆண்டில் எச்சரித்திருந்தது.

தங்கள் பிராந்தியத்தில் உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்குவதில் பணிபுரியும் சீன நிறுவனங்களின் குறைந்த அளவிலான சுற்றுச்சூழல் இணக்கத்துக்கு கானா மற்றும் ஐவரி கோஸ்ட் போன்ற நாடுகள்  இரையாகின்றன.

உகாண்டாவில், சீனாவுக்குச் சொந்தமான சைனா இன்டர்நேஷனல் மற்றும் வாட்டர் எலெக்ட்ரிக் ஆகியவை வெள்ளை நைல் நதியில் இசிம்பா நீர்மின் நிலையத்தை நிர்மாணிக்க முன்வந்தன. இந்த கட்டுமானம் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் வாழ்விடங்களுக்கு நிர்வகிக்க முடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்று பலமுறை எச்சரித்த பின்னரும் இது செய்யப்பட்டது.

இதேபோல் ஐவரி கோஸ்டில், புகழ் பெற்ற சின்ஹைட்ரோ இன்டர்நேஷனல் சுற்றுச்சூழல் கவலைகளை மீண்டும் மீண்டும் புறக்கணித்தது மற்றும் நீர்மின் நிலையத்தால் பாதிக்கப்பட்ட சசாந்திரா நதியைச் சுற்றியுள்ள உள்ளூர் குடியிருப்பாளர்களுக்கு வேண்டுமென்றே நிவாரண அமைப்புகளை நிறுவும் பொறுப்பில் தோல்வியடைந்தது.

பொருளாதார முன்னேற்றத்தின் குறுகிய கால ஆதாயம் சீனக் கடன்கள் மற்றும் உட்கட்டமைப்பின் ஆதாயம் கவர்ச்சிகரமானதாகத் தோன்றலாம், இருப்பினும் இத்தகைய சூழ்நிலையின் நீண்டகால விளைவுகள் தாக்கங்களை எட்டியுள்ளன.

இந்தத் திட்டங்கள் நிரூபிக்கப்பட்ட சுற்றுச்சூழல் சேதம் உண்மையில் மீள முடியாதது என்பதுடன், அவர்கள் நாடுகளில் இருந்து பொருளாதார மற்றும் மூலோபாய நன்மையை எடுத்துக்கொள்வார்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.