பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, பாடசாலை விடுமுறை ஆரம்பமானதும், பதுளை, யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைக்கு (KKS) பல ரயில் சேவைகளை சேர்க்க திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் NJ இண்டிபோலகே தெரிவித்தார்.
இருப்பினும், ரயில் என்ஜின்கள், ரயில்வே காவலர்கள், என்ஜின் டிரைவர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையை திணைக்களம் எதிர்கொண்டுள்ளது. இதனால், பண்டிகைக் காலங்களில் கூடுதல் ரயில் சேவைகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இருந்த போதிலும், டிசம்பர் 24 ஆம் திகதி இரவு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை விசேட புகையிரதமொன்றும், பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரையில் மற்றுமொரு விசேட புகையிரதமும் சேவையில் ஈடுபடுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் பதுளைக்கு மற்றுமொரு விசேட ரயில் சேவையில் ஈடுபடவுள்ளது.
கொழும்பு-யாழ்ப்பாணம் ரயில் வாரத்தில் ஏழு நாட்களும் இயக்கப்படும் மற்றும் யாழ்தேவி விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.