ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், நேற்றுக்காலை முக்கிய உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இருவரும் தொலைபேசியில், சில நிமிடங்கள் உரையாடியுள்ளனர் என, இருதரப்பு வட்டாரத் தகவல்களும் தெரிவித்தன. ஒக்டோபர் 26ஆம் திகதிக்குப் பின்னர் இருவரும் முதல்தடவையாக நேற்று (18) பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதவியிலிருந்து நீக்கப்பட்டு, மஹிந்த ராஜபக்ஷ, பிரதமராக ஒக்டோபர் 26ஆம் திகதியன்று நியமிக்கப்பட்டார். அதனையடுத்து, இலங்கை அரசியலில் ஒரு ஸ்திரமற்ற நிலைமை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.