நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் சகல பிரசார நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இதற்கமைய, 13,14,15 ஆம் திகதிகளில், ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசாரக் கூட்டங்கள் அனைத்தும் இரத்துச்செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.