ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று (07) காலை கொழும்பு, விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தது. அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் கட்சிக்கு புதிய தலைமை பதவியை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாக இருந்தது. இதன்படி, பொதுஜன பெரமுனவின் தேசிய அழைப்பாளராக ரோஹித அபேகுணவர்தனவை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.