காலி மாநகர சபையில் ஏற்பட்ட மொழிப்பிரச்சினையால், சபையின் முதலாவது அமர்வு இன்று 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர மேயர் பிரியந்த சஹபந்து தலைமையில் இன்று சபை கூடிய போது, சபை நடவடிக்கைகள் சிங்கள மொழியில் முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எம்.எப்.ரிஹான, சிங்கள மொழியை புரிந்தகொள்வதில் பிரச்சினை இருப்பதாகவும், தனக்கு மொழப் பெயர்ப்பாளர் ஒருவர் தேவை எனவும் வலியுறுத்திய நிலையில் சபையில் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் பி.எல்.தேசப்பிரிய ரிஹானாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டதோடு, மொழிப்பெயர்ப்பாளர் ஒருவரின் அவசியத்தையும் வலியுறுத்தினார். இதனால் சபையில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் சபை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதாக நகர மேயர் அறிவித்தார். இதன் பின்னர் சபை மீண்டும் கூடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.