இராணுவமும் ஹட்டன் பொலிஸாரும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (12) மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றங்களுக்காகத் தேடப்பட்டுவந்த 102 நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஹட்டன் பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் பிரணதீப் வீரசேகர தெரிவித்துள்ளார்.