ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
யானை வேலிகளைப் பாதுகாப்பதற்காக வனவிலங்கு அமைச்சிற்கு 4,500 பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்காக புதிய பணியாளர்கள் யாரும் நியமிக்கப்பட மாட்டார்கள். அமைச்சுக்கு இணைத்துக் கொள்ள அங்கீகாரம் பெற்ற பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஏற்கனவே யானை வேலியின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார். (