ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க கட்சி தீர்மானித்தால், அதியுச்ச ஆதரவு அளிக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். வேறு வேட்பாளரை நியமிக்க கட்சி முடிவு செய்தால், அதற்கும் ஆதரவு அளிக்கும் என்றார்.
கட்சியின் சில எம்.பி.க்கள் தங்களது தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாகவும், அவர்கள் விரும்பியதைச் செய்வதற்கான சுதந்திரம் வழங்கப்பட்ட பின்னர் அது ஒரு பிரச்சினையாக இருக்காது என்றும் அவர் மேலும் கூறினார்.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.