யாழ். மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கங்களுடன் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) மற்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர் ஆகியோருடன் இன்றைய தினம் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் கோதுமை மாவின் விலை அதிகரித்ததன் காரணத்தால் 450 கிராம் நிறையைக் கொண்ட பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரித்து 85 ரூபாய்க்கு விற்பனைச் செய்வதற்கும், ஏனைய வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படுவதில்லையென தீர்மானிக்கப்பட்டது.