யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பராமரிப்பு பகுதியே இந்த இடித்து அழிக்கும் பணியை இரவோடு இரவாக முன்னெடுத்தது.
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், 2018ஆம் ஆண்டு ஏப்ரலில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் முடிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் நினைவு தூபி இடித்தடிக்கப்பட்டது.
இதேவேளை நள்ளிரவை தாண்டியும் பல்கலை மாணவர்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பல்கலை முன்றலில் அமர்ந்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்நிலையில் பெருமளவான பொலிஸ் விசேட அதிரடி படையினர் , பொலிஸார் , இராணுவத்தினர் குவிக்கப்ட்டுள்ளனர்.