யாழ்ப்பாண குடா நாட்டில் வாள் போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டுள்ள 17 காவாலிக் குழுக்கள் இயங்கி வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பொஸிஸ் புலனாய்வு பிரிவினர் நேற்று இது தொடர்பாக தகவல் வௌியிட்டுள்ளனர். இந்த குழுக்களின் பெரும்பாலானவை வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டிருப்பது முக்கிய அம்சம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இயங்கும் இந்த குழுக்கள் கடந்த சில வருடங்களில் குடாநாட்டில் 127 வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கூலிப்படையாக செயற்படும் இந்த குழுக்கள் பணத்தை பெற்றுக்கொண்டு பலரை வெட்டி காயப்படுத்தியுள்ளனர்.
கொலை, வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களை தாக்கி சேதப்படுத்துதல், கப்பம் பெறுதல், கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுதல் உட்பட பல குற்றச் செயல்களில் இந்த குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த குழுக்களில் ஆவா குழு மற்றும் டினோ குழு ஆகியன முக்கிய குழுக்கள் எனவும் அவற்றில் 18 முதல் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களே உறுப்பினர்களாக இருப்பதாக புலனாய்வு பிரிவின் தகவல்கள் கூறுகின்றன.
யாழ்ப்பாணத்தில் இயங்கும் இப்படியான ஆயுத குழு ஒன்றின் உறுப்பினர்களை பல கூரிய ஆயுதங்களுடன் பொலிஸார் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்தனர்.
யாழ்ப்பாண குடா நாட்டில் இயங்கும் இப்படியான பல குழுக்கள் பற்றிய தகவல்களை புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதுடன் அவற்றின் உறுப்பினர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வருடங்களில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட வன்முறை குழுக்களை சேர்ந்த 221 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அரசில்வாதிகள் கண்டும் காணமலும். தங்கள் சுயநலத்திற்காக அரசியல் லாப வேட்டைக்காக காத்திருக்கிறர்கள் என்பது கூறிப்பிடதக்கது