புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் கட்சியின் பாராளுமன்றக் குழுவுடன் மேலும் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் நாளை (14) காலை 9.00 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வெளியேறியதன் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதியை சந்திப்பது இதுவே முதல் தடவையாகும்.