இந்நிலையில் இந்தியாவுக்குக் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய ரஷ்யா முன்வந்துள்ளது. இதற்கான உடன்படிக்கை விரைவில் கையொப்பமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியானது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி மாளிகைச் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, ”ரஷ்யாவுக்கு இந்தியா ஆதரவளிப்பது உக்ரேன் மீதான அதன் படையெடுப்பை ஆதரிப்பது போலாகும் என்பதால் வரலாற்றில் எப் பக்கத்தில் நிற்க வேண்டும் என இந்தியா சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.