இது தொடர்பான வழக்கு இன்று (30) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ரஷ்ய இராணுவத்தில் சிவில் சேவைக்காக இலங்கையர்களை அனுப்புவதாக தலா 15 இலட்சம் ரூபா அறவீடு செய்ததாக 7 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதன் அடிப்படையில் 2 சந்தேக நபர்களும் கடந்த மே மாதம் 15 ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிறுவனத்தினால் மோசடி செய்யப்பட்ட பணத்தின் தொகை சுமார் 1 கோடி ரூபாவுக்கும் அதிகம் என பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாடுகள் தெரிவிக்கின்றன.