அத்துடன், இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய ரஷ்ய விமானம் தொடர்பான பிரச்சினை தற்போது பாரிய அளவில் உருவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை இல்லாமலாக்கிக் கொள்ளவும், நாட்டின் தேயிலையை விற்பனை செய்து கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளவுமே அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன், இந்த அபாய நிலையைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் ஜனாதிபதி அல்லது வெளியுறவு அமைச்சர் ஆகியோர் காணப்படுவது ஏன் எனவும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார்.