ருமேனியாவில் ஒரு முஸ்லிம் பெண்மணி பிரதமராக தெரிவாகி உள்ளார். ஆனால், அவரை பதவியில் அமர்த்துவதற்கு ஜனாதிபதி மறுத்து வருகிறார். அதற்கான காரணம் எதையும் கூறவில்லை. ஐரோப்பிய ஒன்றிய நாடொன்றின் முதலாவது முஸ்லிம் பிரதமராக வரும் வாய்ப்புப் பெற்றுள்ள Sevil Shhaideh, 52 வயதான பொருளியல் நிபுணர். இதற்கு முன்னர் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வகித்துள்ளார். முன்னாள் சோஷலிச ருமேனியாவில் கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தது, சமூக ஜனநாயகக் கட்சி (PDS) என்ற பெயரில் இயங்குகிறது. அந்தக் கட்சியின் சார்பாக தான் மேற்படி முஸ்லிம் பெண்மணி பிரதமராக தெரிவானார். திருமதி Sevil Shhadeh இன் கணவர் Akram Shhadeh, சிரியாவில் ஆசாத் அரசில் முக்கிய பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக இருந்தவர். தற்போதும் ஆசாத் அரசின் ஆதரவாளர். பிரதமர் பதவி மறுக்கப் பட்டதற்கு அதுவும் காரணமாக இருக்கலாம்.
(Kalai Marx)