வாழ்க்கைச் செலவு முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளதால் இந்த கோரிக்கை விடுக்கப்படுவதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட உள்நாட்டு இறைவரி பொது ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜித் புஷ்ப குமார தெரிவித்தார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
“பால்மா, எரிவாயு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் விலைகள் சமீப காலமாக முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.
முடி வெட்டுவது, மருந்து வாங்குவது அல்லது வேறு சேவையைப் பெறுவது என எங்களிடம் வசூலிக்கும் பணத்தை அதிகப்படுத்தியுள்ளனர்.
எனவே, ஒட்டுமொத்த அரச ஊழியர், தோட்டத் தொழிலாளி, தனியார் நிறுவன ஊழியர் ஆகியோர் இன்று வாழ்வாதாரத்தை மேற்கொள்வது சிரமமாக உள்ளது.
எனவே, அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேறு வழியில்லை. சம்பளம் அரசாங்கத்தால் வழங்கப்படுவதால் அவர்களிடம் கோரிக்கை விடுக்கிறோம். வாழ்க்கைச் செலவு கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அரச ஊழியர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் இன்று தலைகுப்புற விழுந்துள்ளனர்.
எனவே, பொருட்களின் விலையை உயர்த்தியுள்ள அரசாங்கத்துக்கு அரச ஊழியர்களுக்கான வாழ்வாதார ஊதியத்தை வழங்க வேண்டிய பொறுப்பு உள்ளது. அனைத்து ஊழியர்களுக்கும் ரூ.10,000 சம்பளத்தை உயர்த்தி வழங்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.
அதேபோல் அனைத்து அரசு ஊழியர்களும் ஒன்றிணைந்து நாளை மாபெரும் போராட்டத்தை நடத்த தயாராக இருக்கிறோம்“ என்றார்.