எனினும் சிவாஜிலிங்கம் தனது முடிவை மாற்ற மாட்டேன் என உறுதியாக தெரிவித்து வருகிறார்.
தொடர் அழுத்தங்களையடுத்து, நேற்று மதியத்தின் பின்னர் தொலைபேசியை நிறுத்தி வைத்துள்ளார் சிவாஜிலிங்கம்.
ரெலோ அமைப்பின் தவிசாளரான எம்.கே.சிவாஜிலிங்கம் சார்பில் நேற்று ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கட்டுப்பணம் செலுத்தினார்.
சுயேட்சையாக தேர்தலில் களமிறங்க வசதியாக, நேற்று முன்தினம் ரெலோவின் தவிசாளர் பதவியை துறக்கும் கடிதத்தை, கட்சியின் செயலாளர் என்.சிறிகாந்தாவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
எனினும், இன்று தேர்தல்கள் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தும் வரை சிவாஜியின் முடிவு பற்றி கட்சிக்குள்ள் பல முக்கிய தலைவர்கள் அறிந்திருந்தமை குறிப்பிடத் தக்கது.
நேற்று சிவாஜிலிங்கம் கட்டுப்பணம் செலுத்திய தகவல் வெளியான பின்னர், கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் சிவாஜிலிங்கத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகும்படி வலியுறுத்தினர்.
ரெலோவின் வெளிநாட்டு பிரமுகர்கள் பலரும் இம் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டாமென வலியுறுத்தப்பட்டது.
கட்சி தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் தொலைபேசி வழியாக பேசிய போது கடும் தெனியில் சிவாஜிலிங்கம் செல்வத்தை எச்சரித்துள்ளார்.
கட்சிக்கட்டுப்பாட்டை மீற வேண்டாமென கட்சி பிரமுகர்கள் குறிப்பிட்டபோது, சிவாஜிலிங்கம் கடுப்பாகி கட்சியின் அரசியல், தலைமைக்குழு பல முடிவுகள் எடுத்தது அதற்கு கட்டுப்பட்டா செயற்பட்டனர் பாராளுமன்ற உறுப்பினர்கள்…
வரவு செலவு திட்டத்தை ஆதரிக்க வேண்டாம், அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டாமென முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அந்த முடிவையெல்லாம் மீறி செல்வம் அடைக்கலநாதனும், கோடீஸ்வரனும் அரசாங்கத்தை காப்பாற்றினார்கள்.
அதெல்லாம் கட்சி கட்டுப்பாட்டை மீறும் செயலில்லையா? அதையெல்லாம் நீங்கள் கேட்டீர்களா?கட்சி தவிசாளர் பதவியிலிருந்து விலகி விட்டுத்தான் போட்டியிடுகிறேன். ஆனால், கட்சியின் அடிப்படை உறுப்பினராக தொடர்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தியாகிகளின் கோயிலாக இருந்த ரெலோ இன்று கூத்தாடிகளின் கூடாரமாக மாறி விட்டது செல்வம் குடும்பத்துடன் பிள்ளைகள் மற்றும் மரமகனிற்கு நல்ல அரச வேலை கொழும்பபில் அரச வீடு இலவச வாகனம் என சகல வசதிகளுடன் செல்வம் உள்ளார் அதற்கு சற்றும் குறையாமல் கோடீ்வரன் 75மில்லியன் விடுதலைப்புலிகளின் பணத்தை ஏப்பமிட்டவிட்டு அரச ஒப்பந்தங்களில் பணத்தை அள்ளி பாவப்பட்ட அம்பாறை மக்களை நடுத் தெருவில் விட்டுள்ளார்.
இவர்கள் எல்லாம் இன்று ரெலொவின் அரசியல் வாதிகள் நினைக்க கேவலமாக உள்ளது என கொட்டித் தீர்த்துள்ளார் சிவாஜிலிங்கம்.
எனினும், அவரை சமரசப்படுத்தி, தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலக வைக்கும் இறுதிநேர முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.