லண்டனில் தலைவிரித்தாடிய தமிழ் இளைஞர்களின் வன்முறைகளைக் கட்டுப்படுத்த ஸ்கொட்லண்ட் யாட் தனிப்படைப் பிரிவு ஒன்றையும் 24 மணிநேர தொலைபேசிச் சேவை ஒன்றையும் சிறிதுகாலம் ஒழுங்குபடுத்தி இருந்தது. அப்போது ஸ்கொட்லன்ட் யாட்டுக்கு ஆலோசணை வழங்க அவர்கள் உருவாக்கிய குழுவில் நானும் இடம்பெற்று இருந்தேன். அவ்வேளை அவர்கள் லண்டனின் 30 வரையான வன்முறைக்குழுக்களின் இருப்பிடங்களை முற்றுகையிட்டு நூறுபேர் வரை கைது செய்யப்பட்டனர். இந்நடவடிக்கைகளில் ஒன்றுக்கு நாங்களும் அழைத்துச் செல்லப்பட்டோம். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் கீழே இணைக்கப்பட்டு உள்ளது. லண்டனில் நடைபெற்ற வன்முறைகளின் தன்மையை ஆராய ஸ்கொட்லன்ட் யாட்டின் இருவர் கொண்ட குழு ரொறன்ரோவுக்கும் பயணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 2000 – 2005 காலப்பகுதி லண்டனில் தமிழ் இளைஞர்களின் வன்முறை அதன் உச்சத்தில் இருந்த காலகட்டம். 20 வரையான இளைஞர்கள் இந்த வன்முறை தாக்குதல்களின் போது கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்தனர். 600 வரையான தமிழ் இளைஞர்கள் இந்த வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தனர். ஒப்ரேசன் என்வர் நடவடிக்கையைத் தொடர்ந்து வன்முறைகள் வீழ்ச்சி அடைந்தன. இன்னும் பிரித்தானியச் சிறைகளில் 200 வரையான தமிழ் இளைஞர்கள் வன்முறை தொடர்பான வழக்குகளில் தண்டனை பெற்று வருகின்றனர்.
(Jeyabalan Thambirajah )