லவ் யூ – னு சொல்லாம இப்படியெல்லாம் சொல்லலாம்


நான் உன்னை காதலிக்கிறேன் என்று நேரடியாக ஒருவரிடம் சொல்லத் தயக்கமாக இருந்தால் கீழ்வரும் வழிகளில் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் காதல் கைகூடும் வாய்ப்பு மிக அதிகம்.

·         இதுவரை பாதியாய் இருந்த என்னை நீதான் முழுமையாக்குகிறாய்.

·         என் இதயம் முழுக்க உன் அன்பு தான் நிறைஞ்சு இருக்கு

·         எனக்கு இனி எல்லாமே நீ தான்.

·         நான் உன்மேல பைத்தியமா இருக்கேன்

·         உன் அன்புக்கு முன்னால் இந்த வானம் ரொம்ப சின்னது

·         இப்படி கவிதை மொழிகளில் நீங்கள் சொல்லலாம்.நேரடியாக ஐ லவ் யூ என்று சொல்வதை விட அதிக ஈர்ப்பு இந்த வார்த்தைகளுக்கு இருக்கிறது.

·         உன்னால் தான் நான் அர்த்தமடைகிறேன்.

·         உன் அன்பும் நட்பும் என்னை தினமும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.

·         நீ அருகில் இல்லாத போது நான் ரொம்ப மிஸ் பண்றேன்.

·         எனக்கு உன்மீது நிறைய அக்கறை இருக்கிறது.

·         நீ எனக்கு மிக முக்கியம்.

இப்படி நட்பு ரீதியாகவும் நீங்கள் உங்களுடைய லவ் ப்ரபோசலை செய்ய முடியும். அதிலும் நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறுபவர்களுக்கு இந்த ப்ரபோசல் முறைகள் நன்றாக வொர்க்அவுட் ஆகும்.